பதிவு செய்த நாள்
07
டிச
2012
11:12
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமிஹயக்ரீவர் கோவிலில், ஏக தின லட்சார்ச்சனைநிகழ்ச்சி, வரும் 9ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, இக் கோவிலில் ஹயக்ரீவ பெருமாள்சன்னதியில் எழுந்தருளியுள்ள நவ நரசிம்மர் மற்றும் பானகநரசிம்மர் சுவாமிகளுக்கு, வரும் 9ம் தேதி காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரை, ஸ்ரீ நரசிம்ம சகஸ்ரநாம அர்ச்சனை ஏகதின லட்சார்ச்சனையாக நடைபெற உள்ளது.கார்த்திகை மாத ஞாயிற்றுக் கிழமையில், எம்பெருமான்மூன்றாவது கண்ணைத் திறந்து பார்ப்பதாக ஐதீகம்.அந்நாளில், நடக்கவுள்ள லட்சார்ச்சனையில் பக்தர்கள் கலந்து கொண்டு, தம்பதி ஒற்றுமை, பய நிவர்த்தி,கடன் நிவாரணம், தொழில் முன்னேற்றம், திருமணம்ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம், சொந்த வீடுஅமையும் யோகம் ஆகிய பலன்கள் பெறுமாறு, கோவில்நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகளை, கோவில் சிறப்பு அதிகாரி,லட்சுமி ஹயக்ரீவப் பெருமாள் பக்த ஜனசபையார், ஸ்ரீலட்சுமி சரஸ் மாருதி டிரஸ்ட் ஆகியோர் செய்துள்ளனர்.