நடுவீரப்பட்டு; சி.என்.,பாளையம் மலையாண்டவர் கோவிலில், பாலசித்தர் குழந்தைசுவாமி சித்தருக்கு இன்று பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையை முன்னிட்டு, நேற்று காலை 10:00 மணிக்கு சிறப்பு ேஹாமம் நடந்தது. தொடர்ந்து மகா அபிஷேக, ஆராதனை நடந்தது. பின், பக்தர்களுக்கு அமுது படைத்தல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சித்தர் குழந்தை சுவாமியை வழிபட்டனர். அதேபோல் நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள சித்தர் பச்சகேந்திரசுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.