கும்பகோணம்: செம்பியவரம்பல் கானகத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும், 10ம் தேதி நடக்கிறது.கும்பகோணம் அருகே உள்ள செம்பியவரம்பல் கிராமத்தில், ஸ்ரீகானகத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலய திருப்பணி நடந்து, பல ஆண்டுகள் ஆன நிலையில், கிராமத்தினர் புதிய திருப்பணிக்கமிட்டி அமைத்து, திருப்பணி வேலைகளை மேற்கொண்டனர்.கடந்த சில மாதங்களாக நடந்து வந்த திருப்பணி வேலைகள் நிறைவுற்ற நிலையில், இம்மாதம், 10ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும், 9ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜை துவங்குகிறது. 10ம் தேதி காலை, இரண்டாம் கால யாகபூஜை நடந்து, 9.45 மணிக்கு கடம் புறப்பாடு நடக்கிறது. 10.05 மணிக்கு விமான கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மஹா தீபாராதனையும், பிரசாதம் வழங்கலும் நடக்கிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை திருப்பணிக்கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.