புவனகிரியில் பூவராகசுவாமிக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2025 11:03
புவனகிரி; புவனகிரியில் நேற்று நடந்த மாசி மகத்திரு விழாவில் சுற்றுபகுதியினர் பங்கேற்று ஸ்ரீ முஷ்ணம் பூவராகசுவாமி தரிசனம் செய்ததுடன், பாலக்கரையில் உற்சாக வரவேற்பளித்து அழைத்துச் சென்றனர்.
கடலுார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுஷ்ணம் பூவராசுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மாசி மாதத்தில் ஆண்டு தோறும் தீர்தவாரி உற்சவம் நடக்கிறது. இந்தாண்டு தீர்த்தவாரி கடந்த 14 ம் தேதி கிள்ளையில் நடந்தது. இரவு அங்குள்ள மண்டபத்தில் தங்கி அருள் பாலித்தார். பல்வேறு பகுதிகளில் சிறப்பு வழிபாடு மண்டகப்படிக்குப் பின் நேற்று புவனகிரி பாலக்கரையில் பக்தர்கள் சிறப்பு வரவேற்பளித்து சவுரஷ்டிரா வீதிக்கு அழைத்துச் சென்றனர். அங்குள்ள கண்ணன் மடத்தில் திருமஞ்சன நிகழ்ச்சியும், மாலையில் சிறப்பு அலங்காரத்துடன் அர்ச்சனை நிகழ்ச்சியும் வெகு விமர்சியாக நடந்தது.