Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் தவன ... புவனகிரியில் பூவராகசுவாமிக்கு பக்தர்கள் உற்சாக வரவேற்பு புவனகிரியில் பூவராகசுவாமிக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணமேல்குடி அருகே ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மணமேல்குடி அருகே ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோவில் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

18 மார்
2025
11:03

புதுக்கோட்டை; கார்க்கமலம் கிராமத்தில் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் கள ஆய்வில், ராஜராஜ சோழன் நிறுவிய சிவன் கோவில் கண்டறியப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த் துறை தலைவரான, தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் காளிதாஸ் மற்றும் குழுவினர், மணமேல்குடி அருகே கார்க்கமலம் கிராமத்தில் நேற்று கள ஆய்வு செய்த போது, அங்கு இடிந்த நிலையில் சிவன் கோவில் ஒன்றை கண்டறிந்தனர்.


காளிதாஸ் கூறியதாவது: இது காந்தளூர் சாலை கலமருதருளிய ராஜகேசரி பன்மரான அருண்மொழிவர்மன் நிறுவிய மிழலை கூற்றத்துக் கார்க்கமலம் பொதுவுடையார் கோவில். ஆவுடையார்கோவில் அருகே ஒக்கூர் பெருமாள் கோவில் கல்வெட்டு ஒன்றில், ‘இவ்வூரின் கார்க்கமலம் தேவதச்சனார், நந்தா விளக்கு செய்து கொடுப்பதாக’ என, கல்வெட்டு செய்தி வருகிறது. இதன் அடிப்படையில், கார்க்கமலம் பொதுவுடையார் கோவிலானது, அரசியல் மாற்றங்களாலும், போர்க் காரணங்களாலும் தற்போது அழிந்த நிலையில், வழிபட ஆளின்றி கிடப்பதைக் காணலாம். இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களை பராமரிப்பதும், பாதுகாப்பதும் பொதுமக்கள் மற்றும் அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar