கோடைகாலத்தில் ராஜஸ்தான் மக்களுக்கு ‘லுா’ என்னும் வெப்புநோய் தாக்கியது. இதிலிருந்து தப்பிக்க நீண்ட, அடர்த்தியான தலைப்பாைகையை அணியத் தொடங்கினர். அந்த நேரத்தில் அங்கு பயணம் மேற்கொண்ட விவேகானந்தர், ராஜஸ்தான் மன்னரை சந்தித்தார். அவர் விவேகானந்தரிடம்,‘‘ வெயிலின் கடுமை தாக்காமல் இருக்க, தலைப்பாகை கட்டிக் கொள்ளுங்கள்’’ என வேண்டினார் மன்னர். விவேகானந்தரும் ஆர்வமாக தலைப்பாகை அணிய பழகினார். அதுவே பின்னாளில் அவரது தனித்தன்மை காட்டும் அடையாளமாக மாறியது.