காந்திபுரத்தில் களைகட்டிய முனியப்ப சுவாமி கோவில் பங்குனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19மார் 2025 02:03
கோவை: கோவை காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோட்டில் உள்ள முனியப்ப சுவாமி கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பல நூற்றாண்டு சிறப்பு வாய்ந்த காந்திபுரம் பகுதியில் காக்கும் தெய்வமாக கருதப்படும் முனியப்ப சுவாமி கோவிலில் கடந்த செவ்வாய் கிழமை அன்று விநாயகர் வேள்வி பூஜை மற்றும் அபிஷேக தீபாராதனை நடந்தது. மாலையில் மாவிளக்கு பண்டிகை மற்றும் சாமி திருவீதி உலாவும், வரும் வெள்ளிக்கிழமை 108 சங்காபிஷேக பூஜை மற்றும் அன்னதானம் நடக்க உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.