அகத்தியர் இசைப் பேரவை மற்றும் நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்கள் சார்பில் சங்கீத மூர்மூர்த்திகள் படத்திற்கு முன்பாக இசை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் ஏழுமலை, சக்திவேல் முன்னிலை வகித்தனர். அய்யனார் வரவேற்றார். தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் இசை விழா நடந்தது. இதில் காமகோடி பீட ஆஸ்தான வித்வான் யுவராஜ், ராமநாதன் ஆகியோரின் நாதஸ்வர இசையும், தாராபுரம் கணேஷ், இடும்பாவனம் மணிகண்டன் ஆகியோரின் கச்சேரியும் நடந்தது. தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் கோதண்டராமன், சிவானந்த குடில் தங்கதுரை, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் இளங்கோவன், பழனிவேலு ஐ.டி.ஐ., தாளாளர் ராஜேந்திரன் பேசினர். 100 க்கும் மேற்பட்ட ஆயந்துார் பகுதி மற்றும் விழுப்புரம் மாவட்ட நாதஸ்வரம், தவில் இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.