அவனியாபுரம்; அவனியாபுரம் செம்பூரணி ரோடு அழகு முத்துமாரியம்மன் கோயிலில் 56வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா நடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியாக அம்மனுக்கு கரகம் எடுத்தல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்தும், குழந்தையை கரும்பு தொட்டிலில் எடுத்துச் சென்றும், முகத்தில் அழகு குத்தி தீ மிதித்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். சில பக்தர்கள் குழந்தைகளுடன் தீ மிதித்தனர். நாளை மாவிளக்கு வைத்தல், விளக்கு பூஜை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை முளைப்பாரி ஊர்வலமும், அம்மனுக்கு கிடாய் வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது.