பதிவு செய்த நாள்
10
டிச
2012
11:12
செஞ்சி: செஞ்சி தாலுகா கீழ்மாம்பட்டில் உள்ள அம்மச்சார் அம்மன் கோவில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 7ம் தேதி மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், குபேர மகா லட்சுமி ஹோமம், கோபூஜை, தனபூஜை நடந்தது. மறுநாள் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு யாத்ரா தானம், கடம் புறப்பாடும் நடந்தது. 9.20 மணிக்கு செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகமும், 9.50 மணிக்கு அம்மச்சார் அம்மன் கும்பாபிஷேகமும், 10.20 மணிக்கு ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து மேல்மருவத்தூர் அருள்சக்தி அன்பழகன், எம்பார் ஜீயர் சுவாமிகள், பாம்பன் அருட்சித்தர் சஞ்சீவி ராஜா சுவாமிகளின் அருளுரை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் எம்.பி., கிருஷ்ணசாமி, எம்.எல்.ஏ., கணேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தே.மு.தி.க., மாவட்ட பொருளாளர் சிவா, பஸ் உரிமையளர் கிருஷ்ணதாஸ், லலிதா செல்வாம்பிகை கோவில் அறங்காவலர் கன்னியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.