குழந்தையுடன் பூக்குழி இறங்கும் பெண்களுக்கு தனி வரிசை; ஸ்ரீவி பெரிய மாரியம்மன் பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2025 01:03
ஸ்ரீவில்லிபுத்துார்; குழந்தையுடன் பூக்குழி இறங்கும் பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இக்கோயிலில் கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் பூக்குழி திருவிழா துவங்கியது. தற்போது தினமும் காலையில் அம்மன் மண்டகப்படி எழுந்தருளும், இரவில் வீதி உலாவும் நடந்து வருகிறது.மார்ச் 29 மதியம் 12:35 மணிக்கு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடக்கவுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளதால் குழந்தைகளுடன் பூக்குழி இறங்கும் பெண்களுக்கு தனி வரிசை ஏற்படுத்தி தர வேண்டும். வீதி சுற்றி வந்து வரிசையில் நிற்காமல் சிலர் கோயிலின் உட்பகுதி வழியாக வந்து சில நிமிடங்களில் பூக்குழி இறங்கி செல்லும் செயலை கோவில் நிர்வாகம் அனுமதிக்க கூடாது. பக்தர்கள் தீ மிதித்து கோயிலுக்குள் வரும்போது மூலஸ்தானத்தில் பெரிய மாரியம்மனை சிரமமின்றி தரிசிக்க வழி ஏற்படுத்தி தர வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.