திருநெல்வேலி:நெல்லை சிதம்பர நகரில் லெட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்ப பூஜைகள் நடந்தது. நெல்லை சங்கர்நகர் செல்லும் வழியில் சிதம்பர நகரில் லெட்சுமி ஹயக்ரீவர் கோயில் அமைக்கும் பணிகள் நடந்துவருகிறது. கல்வியில் தேர்ச்சி பெறவும், ஞானம், புத்தி அபிவிருத்திக்காகவும், மாணவர்கள் தேர்வில் அதிக மார்க் பெறவும் வேண்டி ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமைகளில் லெட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை லெட்சுமி ஹயக்ரீவருக்கு நடந்த பூஜையில் ஏராளமானோர் பங்கேற்றனர். பூஜைகளை மாதவ பட்டாச்சாரியார் நடத்தினார்.