கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு: நெல்லையில் ஓராண்டிற்கு நடத்த முடிவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10டிச 2012 11:12
திருநெல்வேலி: நெல்லையில் ஒரு வருடத்திற்கு ராமாயண தொடர் சொற்பொழிவு நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருச்சியை சேர்ந்தவர் கல்யாணராமன். இவர் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் சுற்றி பல்வேறு ஆன்மிக சொற்பொழிவுகளை செய்துவருகிறார். வெளிநாடுகளிலும் ராமாயணம், மகாபாரதம், வில்லிபாரதம், கம்பராமாயணம், முருகனின் பெருமைகள், கந்தபுராணம், நாராயணனின் பெருமைகள் என பல்வேறு சொற்பொழிவுகளை நடத்திவருகிறார். நெல்லையிலும் பல்வேறு தொடர் சொற்பொழிவுகளை நடத்தியுள்ளார். கம்பராமாயணம் பற்றி நெல்லை ஜங்ஷன் சன்னியாசிகிராமம் விவேக சம்வர்த்தினி சபாவில் ஒரு வருவத்திற்கு தொடர் சொற்பொழிவு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது ஏப்.14ம் தேதி துவங்கி 2014ம் ஆண்டு ஏப்.14ம் தேதி வரை ஒரு வருடத்திற்கு தினமும் மாலையில் 2 மணி நேரம் தொடர் சொற்பொழிவு திருச்சி கல்யாணராமனால் நிகழ்த்தப்படவுள்ளது. ஏற்பாடுகளை விவேக சம்வர்த்தினி சபா நிர்வாகிகள் மற்றும் தாமிரபரணி வைதீக சமாஜத்தினர் செய்து வருகின்றனர்.