பதிவு செய்த நாள்
10
டிச
2012
11:12
தஞ்சாவூர்: அறிநிலைத்துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள தஞ்சை ராஜவிநாயகர் கோவிலில் அறநிலைத்துறையினரால் அறிவிப்பு பலவை வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை கரந்தை ராஜவிநாயகர் கோவில், "அறநிலைத்துறையின்கீழ் கோவில் நிர்வாகம் கொண்டு வரப்பட்டு, தக்கார் நியமித்தும், அதன் ஆண்டு வருவாயை முறைப்படுத்துவதில் அதிகாரிகள் மெத்தனப்÷பாக்கை கடைப்பிடிப்பதால் பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் நிலவுகிறது என, கடந்த நவ., மாதம், 30ம் தேதி "காலைக்கதிர் நாளிதழில், "முறைப்படுத்தப்படாத கோவில் வருவாய்? என, தலைப்பில், செய்தி வெளியானது.தஞ்சை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் இளங்கோ உத்தரவு பிறப்பித்த பின்னரும், தஞ்சை கரந்தை ராஜவிநாயகர் கோவில் அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதில் மெத்தன போக்கு கடைபிடிக்கப்பட்டது. அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் தான் கோவில் உள்ளது என்பதை பக்தர்கள், கடைக்காரர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்கும் வகையில், கோவில் வாசலில் அறிவிப்பு பலகையை வைக்க அறநிலைத்துறை அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, "காலைக்கதிர் செய்தியில் வலியுறுத்தப்பட்டது.அப்போது தஞ்சை மண்டல இணை கமிஷனர் இளங்கோ கூறுகையில், "தஞ்சை, கரந்தை ராஜவிநாயகர் கோவிலில் பொறுப்பேற்றுள்ள தக்கார் மூலம் கடை வாடகை, வருவாய் ஆகியவற்றை முறைப்படுத்த, ஒரு மாதம் கால அவகாசம் ஆகும். கோவிலுக்கு சொந்தமான கடை வாடகை நிர்ணயம் சரியானதா? என முறைப்படுத்திய பின்னரே, வருவாயை முறைப்படி அறநிலையத்துறையின்கீழ் கொண்டு வரப்படும். கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்படும் என, விளக்கம் அளித்திருந்தார்.இந்நிலையில், ராஜவிநாயகர் கோவில் முகப்பில், அறநிலைத்துறை பிளக்ஸ் போர்டு வைத்துள்ளது. போர்டில், " ராஜவிநாயகர் கோவில், தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் ஆளுகைக்குட்பட்டது ஆகும். நன்கொடைகள், காணிக்கைகள் இதர இனங்கள் இத்திருக்கோவிலுக்கு செலுத்த விரும்புவோர், கீழ்க்கண்ட முகவரியில் செலுத்தி, அச்சு ரஷீது பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என, செயல் அலுவலர் பெயரில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது."காலைக்கதிர் செய்தி எதிரொலியாக, தஞ்சை மண்டல இணை கமிஷனர் இளங்கோ நடவடிக்கையின்பேரில், கோவிலில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டாலும், நிரந்தரமாக பெயிண்ட் பலகை வைக்காமல், ப்ளக்ஸ் போர்டு வைத்துள்ளது, ஏதோ, பெயரளவுக்கு எடுக்கப்பட்ட தற்காலிக நடவடிக்கையோ? என, சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஆகையால் நிரந்தரமாக பெயிண்ட் பலகை வைக்க, இதன்பின்னராவது அறநிலையத்துறை உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.