பதிவு செய்த நாள்
28
மார்
2025
02:03
மகாலட்சுமியை வணங்குவதற்கு ஏற்ற நாள் வெள்ளிக்கிழமை. லட்சுமி படத்தை கிழக்கு நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் ஏதாவது மலர் மாலை சூட்டி தீபமேற்றி வழிபடுங்கள். காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி இதில் ஏதாவது ஒன்றை படிக்க வேண்டும். வெள்ளியன்று இந்த வழிபாடு செய்வோர் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம்.
வீட்டில் லட்சுமி படத்துக்கு முன் விளக்கேற்றி வழிபட வேண்டும். வீட்டில் பூஜையின் போது சந்தனம், குங்குமம், புஷ்பம், தூபம், தீபம், நைவேத்யம் மற்றும் வெற்றிலை பாக்கும் வைக்க வேண்டும். கடைசியில், கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். வேத கோஷம், துதிப் பாடல்கள் கேட்க வேண்டும். வீட்டில் மூலைக்கு மூலை குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. அரிசி, பருப்பு போன்ற தானியங்கள் சிதறக் கூடாது. காலையில், முடிந்தால், பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுப்பது புண்ணியம். வெள்ளிக்கிழமைகளில் பசுவுக்கும், கன்றுக்கும் மஞ்சள் பூசி, குங்குமமிட்டு வலம் வருவது பெரிய புண்ணியம். விளக்கேற்றி வழிபட வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.