மனசாட்சிக்கு முக்கியத்துவம் தருகின்ற துலாம் ராசி அன்பர்களே!
உங்கள் ராசிக்கு நற்பலன் தரும் கிரகங்களாக சூரியன், சுக்கிரன் செயல்படுகின்றனர். நிறைவேற்ற வேண்டிய செயல்களை சாதுர்யம், இனிமையாகப் பேசி நன்றாக நடத்துவீர்கள். எதிர்பாராத வகையில் முன்னமே பெற வேண்டிய பணம் வந்துசேரும். வீட்டிற்கு தகுந்த பாதுகாப்பும் வாகன பயணத்தில் மிதவேகமும் நல்லது. உங்களை அவமானப்படுத்த நினைத்த சிலர் அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவர். இதை உணர்ந்து பொறுமையுடன் செயல்படுவதால் சிரமம் வராமல் தவிர்க்கலாம். புத்திரர்கள் உங்கள் குணநலன்களை புரிந்து தொந்தரவு தராத வகையில் நடந்துகொள்வர். அரசு தொடர்பான உதவி கிடைக்க அனுகூலம் உண்டு. உடல்நலம் சுமாராக இருக்கும். தம்பதியர் குடும்பநலன் பேணுவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவர். நண்பர்கள் உங்களின் தேவைகளை அறிந்து இயன்ற அளவில் உதவுவர். தந்தைவழி உறவினர்கள் பழைய சச்சரவுகளை மறந்து உரிமையுடன் சொந்தம் கொள்வர். தொழிலதிபர்கள் கூடுதல் கண்காணிப்புடன் செயல்படுவதால் மட்டுமே உற்பத்தி இலக்கை குறித்த காலத்தில் நிறைவேற்றலாம். நிர்வாகச் செலவு அதிகரிக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளிக்க வாடிக்கையாளர் சேவையில் தகுந்த கவனம் கொள்ள வேண்டும். பணியாளர்கள் பணியிடத்தில் உள்ள சூழ்நிலைகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்படுவதால் பணி இலக்கு திட்டமிட்டபடி நிறைவேறும்.குடும்பப் பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றி கணவரின் சிரமம் குறைய உதவுவர். பணிபுரியும் பெண்கள் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதால் மட்டுமே பணியில் குளறுபடி வராமல் தவிர்க்கலாம். சலுகை பெறுவதில் தாமதம் ஏற்படும். ரசியல்வாதிகள் அதிகாரிகளிடம் அனுசரணையாக நடந்து காரியம் சாதித்துக்கொள்வர். விவசாயிகளுக்கு சுமாரான வருமானம் கிடைக்கும். மாணவர்கள் சக மாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் பெறுவர்.
பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் தொழில் வளர்ச்சியும் பணவரவும் கூடும். உஷார் நாள்: 25.12.12 அதிகாலை 2.29 முதல் 27.12.12 பகல் 2.09 வரை வெற்றி நாள்: ஜனவரி 10, 11 நிறம்: ரோஸ், வெள்ளை
மேலும்
ஆனி ராசி பலன் (15.6.2025 முதல் 16.7.2025 வரை) »