சதுர்த்தி பூஜை; முத்தங்கி அலங்காரத்தில் பிரசன்ன மகா கணபதி அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2025 12:04
கோவை; ராம் நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் பங்குனி மாதம் சதுர்த்தி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நமக்கு வரும் சங்கடம் அனைத்தையும் நீக்கிச் சௌபாக்கியம் தரவல்லது சதுர்த்தி விரதம். எல்லா விரதங்களிலும் இவ்விரதம் மிகச் சிறந்ததாக கருதப்படுகிறது. இன்று சதுர்த்தியை முன்னிட்டு பிரசன்ன மகா கணபதி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் முத்தங்கி அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.