பதிவு செய்த நாள்
02
ஏப்
2025
04:04
கமுதி; கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றுத்துடன் துவங்கியது.
கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அம்மன் உருவம் பொறித்த கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. பின்பு கொடி மரத்திற்கு அபிஷேகம்,சிறப்புபூஜை நடந்தது. பால்குடம், அக்கினி சட்டி, பூக்குழி உட்பட நேர்த்திக்கடன் செலுத்தும் 2000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். ஏப்.8ல் பொங்கல் வைத்தல், ஏப்.9ல் அக்கினிசட்டி, பால்குடம்,பூக்குழி இறங்குதல், சேத்தாண்டி வேடம், ஏப்.11ல் விளக்கு பூஜை, ஏப்.12ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. தினந்தோறும் முத்துமாரியம்மன் வெள்ளிக்குதிரை, மயில்,யானை,சிம்மம், காமதேனு உள்ளிட்ட வாகனத்தில் அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின்முறையினர் செய்தனர்.மேலும் விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து பலரும் கலந்து கொண்டனர். இதேபோன்று கமுதி காளியம்மன் கோயிலில் பங்குனி பொங்கல் விழா முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினார்.