பதிவு செய்த நாள்
03
ஏப்
2025
12:04
செஞ்சி; செஞ்சி அடுத்த பொன்பத்தி சக்திவேல் முருகன் கோவிலில் 52-ஆம் ஆண்டு பங்குனி உத்திர விழா வரும் 11ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு மூலவருக்கு சிறப்பு, அபிஷேகம் அலங்காரம் செய்தனர். 7 மணிக்கு கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகமும், கொடியேற்றமும், தீபாராதனையும் நடந்தது. இம்மாதம் 10ம் தேதி மாலை 6.00 மணிக்கு சக்தி கரகம் ஜோடித்தலும், இரவு 10.00 மணிக்கு சாமி ஊர்வலமும், 11ம் தேதி பங்குனி உத்தரத்தன்று காலை 5 மணிக்கு வினாயகருக்கு பால் அபிஷேகமும், சக்திவேல் ஊர்வலமும், 8.00 மணிக்கு சக்திவேல் முருகனுக்கு சந்தன காப்பும் செய்ய உள்ளனர். தொடர்ந்து 9 மணிக்கு பக்தர்கள் மீது மிளகாய்பொடி அபிஷேகம், மாவு இடித்தல், மஞ்சள் இடித்தல், செடல் சுற்றுதல், 12 மணிக்கு தீ மிதித்தல், வேல் அணிதல், கொக்கித் தேர், காவடி ஊர்வலம், அக்னி சட்டி ஊர்வலமும் நடைபெற உள்ளது. மாலை 5.00 மணிக்கு சக்திவேல் முருகன் தேர் பவனியும், 12ம் தேதி மாலை 06.00 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடைபெற உள்ளது.