பதிவு செய்த நாள்
03
ஏப்
2025
12:04
கூடலூர்; கூடலூர், கோழிபாலம் அருகே, முனீஸ்வரன் கோவில் மரத்தில் கொத்துக் கொத்தாக பூத்துள்ள நாகலிங்க மலர்கள் பக்தர்களையும், சுற்றுலா பயணிகளையும் பரவசப்படுத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில், நாகலிங்க பூக்களின் சீசன் துவங்கியுள்ளது. கூடலூரில் சில கோவில்களிலும், நாடுகாணி ஜீன்பூல் சூழல் சுற்றுலா தாவர மையத்திலும் பூக்கள் மலர்ந்துள்ளது. இதில், கோழிபாலம் அருகே, கோழிக்கோடு சாலையோரம் அமைந்துள்ள முனிஸ்வரன் கோவில் மரத்தில் நாகலிங்க பூக்கள் கொத்துக்கொத்தாக பூத்துள்ளது. இதன் அழகு பக்தர்களை பரவசப்படுத்தி வருகிறது. இவ்வழியாக, பயணிக்கும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பூக்களின் அழகை ரசித்து படம் எடுத்து செல்கின்றனர். சமஸ்கிருதத்தில் நாகலிங்க புஷ்பா என, அழைக்கப்படும், இந்தப் பூவின் மத்தியில் பகுதி சிவலிங்கம் போன்ற வடிவமும், அதற்கு மேல் பாம்பு இறைவனுக்கு குடை பிடிப்பது போன்று இருப்பதால், இந்தப் பூக்கள் சிவலிங்க பூஜைக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இவை பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது.