சஷ்டி வழிபாடு; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஏப் 2025 03:04
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர். சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. முருகனை வழிபட உகந்த நாளாக வளர்பிறை சஷ்டி கருதப்படுவதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். புனித நீராடி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் சுமார் நான்கு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கூட்டமாக காட்சியளித்தது. கோடை விடுமுறையை ஒட்டி இன்று சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.