பதிவு செய்த நாள்
04
ஏப்
2025
03:04
கூடலுார்; மேல் கூடலுாரில் நேற்று துவங்கிய சந்தக்கடை மாரியம்மன் கோவில் திருவிழா, 16ம் தேதி வரை நடக்கிறது. மேல் கூடலுார் அருள்மிகு விநாயகர் மற்றும் அருள்மிகு சந்தக்கடை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று காலை 5:00 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, 9:00 மணிக்கு கொடியேற்று நிகழ்ச்சி நடந்தது. நாளை, மாலை, 7:00 மணிக்கு, ஆற்றில் இருந்து காப்பு கட்டி அம்மனை குடி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை சிறப்பு பூஜைகளும், 10ம் தேதி மாலை கும்ப ஊர்வலம் நடக்கிறது. 11ம் தேதி சிறப்பு பூஜைகளுடன், 12ம் தேதி மாலை, 6:00 மணிக்கு கும்ப ஊர்வலம் நடக்கிறது. 13ம் தேதி காலை, 7:30 மணிக்கு பால்குடம் ஊர்வலம், 14ம் தேதி காலை முதல் சிறப்பு பூஜைகளும், மாலை 7:00 மணிக்கு தேர் ஊர்வலம் நடக்கிறது. 16ம் தேதி மாலை 6:00 மணிக்கு கும்பம் ஊர்வலம் துவ்ங்கியவுன், மஞ்சள் நீராடி, அம்மனை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடக்கிறது.