துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஏப் 2025 05:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவில் அருகில், துாப்புல் வேதாந்த தேசிகர் கோவில் உள்ளது. இக்கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த ஹிந்து சமய அறநிலையத்துறையினர் முடிவு செய்தனர். கடந்த பிப்., 10ம் தேதி பாலாலயம் நடந்தது. தொடர்ந்து 18.70 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டன. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த மாதம் 31ம் தேதி காலை 9:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கியது. இன்று அதிகாலை 3:00 மணி முதல் 4:15 மணிக்குள் விஸ்வரூபம், புண்யாஹவாசனம், காலை 5:15 மணி முதல், 6:45 மணிக்குள் கோவில் கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. காலை 8:30 மணிக்கு சர்வ தரிசனமும், மாலை 6:00 மணிக்கு உற்சவர் புறப்பாடும் நடந்தது.