சபரிமலையில் குப்பையை குறைக்க பக்தர்களிடம் கருத்து கேட்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11டிச 2012 11:12
சபரிமலை: சபரிமலையில் குப்பையை கையாள்வது தொடர்பாக பக்தர்களிடம் கருத்து கேட்கப்படும், என சபரிமலை திருவிழா முதன்மை ஒருங்கிணைப்பாளர் கே. ஜெயக்குமார் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: பக்தர்கள் கருத்து தெரிவிக்க ஆங்காங்கு பெட்டிகள் வைக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆராயப்படும். சுவாமி ஐயப்பன் ரோட்டில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், 20 கி. மீ., வேகத்திற்கு மேல் ஓட்டும் டிராக்டர் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மாளிகைப்புறம் கோயில் அருகே உள்ள அப்பம், அரவணை கவுண்டர் முன்பு நிழற்கூரை அமைக்கப்படும். பிளாஸ்டிக் பாட்டில்களை "ரீசைக்கிளிங் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மகர விளக்கு நாளில் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து டிச., 22 ல் கோட்டயத்தில் கலெக்டர்கள் கூட்டம் நடக்கிறது. இதில் புல்மேடு பகுதி பாதுகாப்பு தொடர்பாக ஆலோசிக்கப்படும்.