பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
04:04
திருப்பதி; திருப்பதியில் வரும் ஏப்ரல் 12ம் தேதி திருமலையில் உள்ள தும்புரு தீர்த்த முக்கோடி விழா நடைபெற உள்ளது.
திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயிலிலிருந்து ஏழரை மைல் தொலைவில் அமைந்துள்ள ஸ்ரீ தும்புரு தீர்த்த முக்கோடி உற்சவம் ஏப்ரல் 12ம் தேதி நடைபெறும். புராணத்தின் படி, திருமலை சேஷகீர்களில் 3 கோடியே 50 லட்சம் புனித தலங்கள் உள்ளன. இந்த இடங்களில், தர்மம், ஞானம், பக்தி, வைராக்கியம் மற்றும் முக்திபிரதாயங்களை வழங்கும் 7 தலங்கள் உள்ளன. அவை சுவாமிவாரி புஷ்கரிணி, குமாரதாரா, தும்புரு, ராமகிருஷ்ணா, ஆகாச கங்கா, பாபவிநாசனம் மற்றும் பாண்டவ தீர்த்தங்கள். அந்தந்த புனித நேரங்களில் இந்த இடங்களில் நீராடினால், அனைத்து பாவங்களும் நீங்கி, முக்தி அடைவதாக கூறப்படுகிறது. இயற்கை அழகின் மத்தியில் நடைபெறும் தும்புரு தீர்த்த முக்கோடிக்குச் சென்று நீராடுவதை பக்தர்கள் புண்ணியமாக கருதுகின்றனர். விழாவில் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.