பதிவு செய்த நாள்
09
ஏப்
2025
06:04
வாலாஜாபாத்; வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடில் உள்ளது பெரியநாயகி சமேத மஹாலிங்கேஸ்வரர் கோவில். இந்த கிராம கோவிலுக்கு, 2012ல், குடமுழுக்கு விழா நடந்தது. அதை தொடர்ந்து, இக்கோவில் கட்டட பகுதிகள் சிதிலம் அடைந்ததையடுத்து, ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த அப்பகுதியினர் தீர்மானித்தனர். அதன்படி, கோவில் கட்டடம், ராஜகோபுரம் மற்றும் மண்டபம் உள்ளிட்ட சிதிலம் அடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணி, சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணி முழுமை பெற்றதையடுத்து, இன்று கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 7ம் தேதி, மஹா கணபதி ஹோமம, 8ம் தேதி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று காலை, காலை 9:45 மணிக்கு, யாகசாலையில் இருந்து, கலசம் புறப்பட்டு, 10:00 மணிக்கு முகப்பு மற்றும் அனைத்து கோபுர கலசங்களுக்கும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில், ஊத்துக்காடு சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.