திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் கெங்கையம்மன் மற்றும் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது.
திருக்கோவிலூர், மார்க்கெட் வீதியில் உள்ள கெங்கையம்மன் மற்றும் ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை 10:00 மணிக்கு நடந்தது. முன்னதாக 6ம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, கலச பூஜை, யாக வேள்வி, மகா பூர்ணாகுதி, கடம் புறப்பாடாகி, 10:00 மணிக்கு கெங்கையம்மன், ஐயப்பன் சுவாமிகளின் மூலவிமான கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டது. திரளான பக்தர்கள் ஐயப்பா கோஷம் முழங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. நாதஸ்வர இன்னிசை கச்சேரியுடன் சுவாமி வீதியுலா நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி விநாயகமூர்த்தி உள்ளிட்ட பக்தர்கள் பலரும் செய்திருந்தனர்.