பதிவு செய்த நாள்
11
டிச
2012
11:12
சேலம்: சேலத்தில், முதல் முறையாக கிருஷ்ண உற்சவம், 14,15 மற்றும் 16 தேதிகளில் நடக்க உள்ளது.கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த, ஸ்ரீகிருஷ்ண உற்சவம், தற்போது, சேலத்தில் முதல் முறையாக நடத்தப்படுகிறது. விஷ்ணு மோகன் பவுண்டேசன் மற்றும் சென்னை ஞான அத்வைத பீடம் ஆகியவை சார்பில், ராமகிருஷ்ணா ரோட்டில் உள்ள கோர்தண்டாஸ் கல்யாண மண்டபத்தில், டிசம்பர், 14ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது.இது குறித்து, சுவாமி ஸ்ரீஹரிபிரசாத் கூறியதாவது:சேலத்தில், ஸ்ரீ கிருஷ்ண உற்சவம் நிகழ்ச்சி, சிறப்பு பூஜை, இசை, நாட்டிய நிகழ்ச்சியுடன், மூன்று நாட்கள் நடத்தப்பட உள்ளது. 14ம் தேதி மாலை, 6 மணிக்கு, சேலம் ஊரக வளர்ச்சி கூடுதல் கலெக்டர் சந்தீப்நந்தூரி குத்துவிளக்கேற்றி நிகழச்சியை துவக்கி வைக்கிறார். 15ம் தேதி காலை, 9 மணிக்கு, சத்சாங்க நிகழ்ச்சியும், 11 மணிக்கு, ஸ்ரீ சுக்த ஹோமமும், மாலை, 6 மணிக்கு, ஸ்ரீ வித்ய வாணி வித்யாலயா பள்ளி மாணவியரின் நடன நிகழ்ச்சி நடக்கிறது. 16ம்தேதி, வித்ய ராஜகோபால ஹோமம், அரசு இசைப்பள்ளி மாணவர்களின் மங்கள இசை, மாணவியரின் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடக்கிறது.கிருஷ்ண உற்சவத்தில், ஞானந்தா சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு அருளுரை வழங்குகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.