அனுப்பர்பாளையம்; திருப்பூர் அடுத்த கணக்கம் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த 5 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 9 ம் தேதி காலை பொங்கல் வைத்தல், மதியம் அம்மனுக்கு அபிஷேகம் உச்சிகால அலங்கார பூஜை நடைப்பெற்றது. தொடர்ந்து பொட்டு சாமிக்கு பொங்கல் வைத்தல், கம்பம், கும்பம், எடுத்து கங்கைக்கு செலாலுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. இன்று 10 ம் தேதி காலை அம்மனுக்கு அபிஷேக பூஜையும், மதியம் மஞ்சள் நீராட்டு மறுபூஜையும் தொடர்ந்து, குறிஞ்சி பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. மாலை சாமி திருவீதி உலா செல்லுதல் நிகழ்ச்சி நடக்கிறது.