தளவாய்புரம் பகுதி கோயில்களில் கோலாகலமாக நடந்த பூக்குழி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2025 12:04
தளவாய்புரம்; தளவாய்புரம் பகுதி கோயில்களில் நேற்று நடந்த பூக்குழி திருவிழா வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் சுற்றியுள்ள கொம்மந்தாபுரம், செட்டியார்பட்டி, முகவூர் உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மன் கோயில்களில் பூக்குழி விழா ஒரே நாளில் நடந்து முடிந்தது. இதன்படி நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு முகவூர் மாரியம்மன் கோயில் பூக்குழி காலை 8:00 மணிக்கு நடந்து தொடர்ச்சியாக தளவாய்புரம் முத்துமாரியம்மன், மாஞ்சோலை காலனி மாரியம்மன், வடகாசி அம்மன், கொம்மந்தாபுரம், செட்டியார்பட்டி தளவாய்புரம் கோயில்களில் பத்ரகாளியம்மன் என நேற்று அதிகாலை 5:30 வரை தொடர்ச்சியாக பூக்குழி திருவிழா நடந்தது. மருளாடிகள் முதல் காப்பு கட்டிய பக்தர்கள் வரை பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர்.