பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
03:04
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் நாளை காலை 8:30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகமும்,காலை 8:50 மணிக்கு மூலஸ்தான மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருப்புத்தூர் தென்மாப்பட்டில் தென் காவல்தெய்வமாக பூமாயிஅம்மன் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் மூலவராக எழுந்தருளியுள்ள சப்த மாதர்கள் பிராஹ்மி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வராஹி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரில் நடுநாயமாக உள்ள வைஷ்ணவியை ‛பூமாயி அம்மன்’ ஆக பக்தர்கள் வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு ராஜகோபுரத்துடன் முதல் கும்பாபிஷேகத்தை ஆ.பி.சீ.அ.கல்லூரி நிறுவனர் நா.ஆறுமுகம்பிள்ளை நடத்தினார். தற்போது நான்காவது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராஜகோபுரம்,விமானம், சப்தமாதர், பைரவர். ஆதிவிநாயகர், முருகன், ஆஞ்சநேயர், நவக்கிரகம் சன்னதிகள்,கோயில் முன் மண்டபம் தூண்கள் பராமரிப்பு, சுதை வேலைப்பாடுகள், வண்ணப்பூச்சு திருப்பணி செய்யப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்.7 ல் யாகசாலை பூஜைகள் துவங்கியது. பிள்ளையார்பட்டி கே.பிச்சைக்குருக்கள் தலைமையில் சிவாச்சார்யர்கள் யாக பூஜைகள் செய்தனர். நாளை அதிகாலை 5:00 மணிக்கு ஆறாம் கால யாகபூஜை துவங்குகிறது. தொடர்ந்து காலை 7:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, காலை 7:35 மணிக்கு கடம் புறப்பாடு, காலை 8:30 மணிக்கு விமான,கோபுர மகா கும்பாபிஷேகம் , காலை 8:50 மணிக்கு மூலஸ்தான மகாகும்பாபிஷேகம் நடைபெறும். காலை 11:00 மணிக்கு அன்னதானம் நடைபெறும். பின்னர் ,மாலை 5:00 மணிக்கு மகாஅபிஷேகமும்,தீபாராதனையும், இரவு 6:30 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். ஏற்பாடுகளை உபயதாரர், முன்னாள் தக்கார் நா.ஆறு.தங்கவேலு, தக்கார் து.பிசு்சுமணி, செயல் அலுவலர் எஸ்.விநாயகவேல் செய்கின்றனர்.