விருத்தாசலம் அங்காளம்மன் கோவிலில் தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2025 03:04
விருத்தாசலம்; கோ.பவழங்குடி சுயம்பு அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. விழா, கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்து வருகிறது. இன்று 10ம் தேதி காலை 8:50 மணியளவில் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடந்தது. இதில், முன்னாள் ஒன்றிய சேர்மன் சுந்தரராஜன், கோவில் நிர்வாகி வெங்கடசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை 11ம் தேதி பங்குனி உத்திர பெருவிழாவையொட்டி, மாலை 4:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம், இரவு 8:00 மணிக்கு நடக்கும் விடையாற்றி உற்சவத்துடன் பங்குனி உத்திர பெருவிழா நிறைவடைகிறது.