பங்குனி உத்திர பாத தரிசனம்; திருவாரூரில் இடது பாதத்தை காட்டி அருள்பாலித்த தியாகராஜர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2025 10:04
திருவாரூர்; தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர பாத தரிசன திருவிழா. பக்தர்களுக்கு இடது பாதத்தை காட்டி தியாகராஜர் அருள்பாலித்தார்.பக்தர்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
திருவாரூர் தியாகராஜர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சைவ சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் பெரிய கோயில் என்று அழைக்கபடுவதும் இதுதான். இந்த கோயிலில் ஆழித்தேரோட்டத்தைப் போன்று பங்குனி திருவிழா மிகவும் பிரசித்திப் பெற்றது. திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில் திருவிழாவில் முக்கிய நிகழ்வான ஆழி தேரோட்டம் கடந்த ஏழாம் தேதி நடைபெற்றது. இந்தநிலையில் பங்குனித் திருவிழாவின் அடுத்த முக்கிய நிகழ்வான பாத தரிசனம் இன்று திருவாரூர் தியாகராஜர் கோயிலில் தியாகராஜர் இடதுபாத தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டம் மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பாத தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனை, மகா அபிசேகம், அருள்மிகு நடராஜன் அபிசேகம் ஆகியவை நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபட்டனர். பாத தரிசனத்தை முன்னிட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமை