பழநி: பழநி கோயிலில் 17 நாட்களில் வசூலான காணிக்கைப் பணம் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டன. வசூல் விபரம்: ஒரு கோடி 19 லட்சத்து 3 ஆயிரத்து 792 ரூபாய். தங்கம்- 795 கிராம். வெள்ளி- 7500 கிராம். அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் பணம்- 511. ஒரே பக்தர் தங்க செயின், மோதிரம், திருமாங்கல்யம், வளையல் என, 40 பவுன் செலுத்தியுள்ளார். உண்டியல் திறப்பின் போது, கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையர் ரமேஷ் உடனிருந்தனர்.