Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராம ஜென்ம பூமி கோவில் ... பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் பூச்சொரித்தல் விழா பரமக்குடி துர்க்கை அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
குன்னுார் தந்தி மாரியம்மன் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 ஏப்
2025
04:04

குன்னுார்; குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் முக்கிய சித்திரை தேர்த்திருவிழா இன்று நடந்தது. தாசப்பளஞ்சிக செட்டியார் சமூகத்தினர் சார்பில் நடந்த இந்த விழாவில், துர்கையம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் துவங்கியது. மகளிர் அபிஷேக பொருட்களுடன், செண்டை, மேள தாளம் முழங்க நடனத்துடன் கோவிலை வந்தடைந்தனர். மதியம் 1:25 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது. இதில் பக்தர்கள் உப்பு மழை பொழிந்து, வழிபட்டனர். விழாவில், இலவச மோர்பந்தல் அமைக்கப்பட்டன. பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டன. தாசப்பளஞ்சிக இளைஞர் சங்கம் சார்பில், கும்மி ஆட்டம், இன்னிசை நிகழ்ச்சி, வாண வேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று தையல் தொழிலாளர்களின் பரிவேட்டை நிகழ்ச்சி நடக்கிறது. 18ல் முத்து பல்லக்கு, 19ல் புஷ்ப பல்லக்கு ஆகியவை நடக்கின்றன. தொடர்ந்து பல்வேறு உபயதாரர்கள் சார்பில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது. மே 9ம் தேதி மறுபூஜையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar