பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித்திருவிழா; அம்மனுக்கு பாலாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஏப் 2025 05:04
சிங்கம்புணரி; சிங்கம்புணரி நாடார்பேட்டையில் உள்ள பத்ரகாளியம்மனுக்கு பாலாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலின் பங்குனித்திருவிழா ஏப். 8 ம் தேதி காப்பு கட்டுதல் பூச்சொரிதலுடன் தொடங்கியது. 9 நாள் மண்டகப்படியாக அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடத்தப்பட்டது. இன்று காலை 9:00 மணிக்கி பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். மாலை 5:00 மணிக்கு அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். பெண்கள முளைப்பாரி, எடுத்தும் மாவிளக்கு வைத்தும்ப்வழிபாடு நடத்தினர். நாளை அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடக்கிறது. ஏற்பாடுகளை சிங்கம்புணரி நாடார்கள் உறவின் முறையினர் செய்து வருகின்றனர்.