நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயில் பூக்குழி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஏப் 2025 11:04
நயினார்கோவில்; பரமக்குடி அருகே நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி உற்ஸவம் நடந்தது. ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தைச் சேர்ந்த கோயிலில் ஏப்.,7 அன்று காப்புகட்டுடன் விழா துவங்கியது. தினமும் பாரத கதைகள் கூறப்பட்டு வந்தவுடன், பீம வேஷம் பல்வேறு கிராமங்களில் நிகழ்த்தப்பட்டது. அரவான் படுகளம், துரியோதனன் படுகளம், துரியோதனன் தபசு நிலை மற்றும் திருக்கல்யாண உற்ஸவம் விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம் இரவு 1:00 மணிக்கு காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்கும் வைபவம் நடந்தது. கரகம் எடுத்த பக்தர் உட்பட ஏராளமானவர்கள் பூக்குழியில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து நேற்று காலை பால்குடம், அபிஷேக ஆராதனைகள் நடந்து சுவாமி வீதி உலா, மஞ்சள் நீராட்டு நடந்தது.