சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ மலர்களால் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டது.
சங்கராபுரம் ஆற்றுபாலம் பகுதியில் உள்ள பெரியாயி அம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாரதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் பலர் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் பெங்களூரை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வெள்ளை, மஞ்சள் சாமந்தி மற்றும் ரோஜா பூக்கள் என 100 கிலோ மலர்களை கொண்டு வந்து பெரியாயி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து குடும்பத்துடன் வழிபட்டார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.