பதிவு செய்த நாள்
12
டிச
2012
11:12
ஊட்டி: உலகளவில் இன்று சிறப்பான நாளாக கருதப்படுகிறது.ஊட்டி மறை மாவட்டம் சார்பில், இன்று மாலை, ஊட்டி புனித மோட்ச ராக்கினி மாதா தேவாலயத்தில், கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சிறப்பு திருப்பலி நடத்தப்படவுள்ளது. அமெரிக்காவில், பக்தர்களுக்கு காட்சி அளித்ததாக கூறப்படும், மாதாவின் உருவப்படத்தை, மறை மாவட்ட பிஷப் அமல்ராஜ், ஸ்தாபகம் செய்யவுள்ளார்.தவிர, சிலுவைப்பாதை நிலைகள், நற்கருணை ஆலயம், ஜெபமாலை நிலைகள், வேதாகம பூங்காவிற்கு அடிக்கல் நாட்டப்படவுள்ளது; இதில், பல தேவாலயங்களில் இருந்து 50 குருக்கள் பங்கேற்கவுள்ளனர். தேவாலயத்தின் புதிய பங்கு பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழி ஏற்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை, பங்கு தந்தை ஜான் ஜோசப் ஸ்தனிஸ், உதவி பங்கு தந்தை சில்வஸ்டர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.