பதிவு செய்த நாள்
12
டிச
2012
11:12
ஊட்டி: உலக அமைதிக்கான, உலகம் தழுவிய சிறப்பு யாகம் இன்று ஊட்டியில் நடக்கவுள்ளது.இன்றைய நாளை, ரமண மகரிஷி சன்மார்க்க பக்தி சங்கம், சிறப்பான முறையில் கொண்டாடவுள்ளது. ரமண மகரிஷி சன்மார்க்க சங்க நிர்வாகிகள் கூறியதாவது:இன்றைய தினம், "கோடி கன்னியாதான நட்சத்திரம் உள்ள நாள்; இன்று, கோடி திருமணங்கள் நடக்க கூடிய மிக சுபிட்சமான நாள். தவிர, சிறப்பு வாய்ந்த "போதாயன அமாவாசை நாள். இன்று, 12:12:12 மணியை, உலகம் தழுவிய உலக அமைதி நேரமாக கடைபிடித்து, உலக அமைதியை வலியுறுத்தி, ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்த வெளி மைதானத்தில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படவுள்ளது.இப்பிரார்த்தனையில் பங்கேற்க நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தொலை தூரங்களில் இருந்து வர முடியாதவர்கள் அந்த குறிப்பிட்ட அந்த மணி நேரத்தில் (12:12:12) தாங்கள் இருக்கும் இடத்திலேயே தீபம் ஏற்றி, ஒரு நிமிடம் மவுனமாக இருக்க வேண்டும். இவ்வாறு, நிர்வாகிகள் கூறினர்.