பதிவு செய்த நாள்
12
டிச
2012
11:12
தென்காசி: தென்காசி கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோயிலில் நேற்று பிரதோஷத்தை ?ன்னிட்டு காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் நந்திக்கு மா பொடி, மஞ்சள் பொடி, திரவியம், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் மகாபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனைக்கு பிறகு நந்தி வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். திரளான பக்தர்கள் த?சனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காசிவிசுவநாதர் கோயிலில் மின் தடையை சமாளிக்கும் வகையில் ஜெனரேட்டர், இன்வெர்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக இன்வெர்டர் சில பழுதாகி விட்டதால் மின் தடை ஏற்படும் போது கோயிலில் போதிய மின் விளக்கு வெளிச்சம் இன்றி இருட்டில் பக்தர்கள் ப?தவிக்கும் நிலை உள்ளது. பழுதான இன்வெர்டர்களை சீர் செய்து போதிய மின் விளக்கு வெளிச்சம் கிடைக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோ?க்கை விடுத்துள்ளனர். தென்காசி குலசேகரநாதர் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. சுவாமி நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் பிரகார உலா வந்தார். மேலச்சங்கரன்கோயில், குற்றாலம் குற்றாலநாதர் கோயில், செங்கோட்டை சிவன் கோயில், ஆய்க்குடி கம்பிளி மகாலிங்கமலை கோயில், புளியரை தட்சிணா?ர்த்தி கோயில் மற்றும் சுற்று வட்டார பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனால் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.