மத்தியபிரதேச ஐகோர்ட் நீதிபதி பூவராகசுவாமி கோவிலில் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2025 05:04
ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் உள்ள பிரசித்திபெற்ற பூவராகசுவாமி கோவிலில் மத்தியப்பிரதேச மாநில ஜபல்பூர் ஐகோர்ட் நீதிபதி சுவாமி தரிசனம் செய்தார். மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர் ஐகோர்ட் நீதிபதி தினேஷ்குமார் பாலிவால் தனது குடும்பத்தினருடன் இன்று பூவராகசுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் கோவிலில் மூலவர் பெருமாள், அம்புஜவல்லித்தாயார் சுவாமிகளை தரிசனம் செய்தார். மேலும் கோவில் வரலாறு குறித்து கேட்டறிந்தார். அப்போது விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர்கள் அரவிந்தன், அன்பழகன், ஸ்ரீமுஷ்ணம் இன்ஸ்பெக்டர் வீரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் சந்திரா,ஆர்.ஐ. பிரேம்ராஜ், வி.ஏ.ஓ. ஜெயமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.