சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவிலில் அமெரிக்க துணை அதிபர் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2025 12:04
டில்லி; இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் வான்ஸ், அவரது மனைவி உஷா, குழந்தைகள், டில்லி அக்ஷர்தாம் கோவிலுக்கு சென்று வழிபட்டனர்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் இந்தியாவிற்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். பாலம் விமான நிலையம் வந்த துணை அதிபருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். தொடர்ந்து டில்லியில் உள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில் சென்ற அவர்கள் அங்கு வழிபாடு செய்தனர். இந்தியாவில் அவர்கள் முதன்முதலில் இங்கு வருகை தந்துள்ளனர். இதன் கம்பீரமான கலை, கட்டிடக்கலை மற்றும் நம்பிக்கை, இந்தியாவின் குடும்பம் மற்றும் நல்லிணக்கத்தின் காலத்தால் அழியாத மதிப்புகளை கண்டு வியந்தனர்.