பொதட்டூர்பேட்டை; பொதட்டூர்பேட்டையில் அமைந்துள்ளது அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில். பழமையான இந்த கோவிலில், நித்திய வழிபாடுகளுடன், பிரதோஷம், ஆருத்ரா, ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேகம் உள்ளிட்ட வைபங்கள் நடந்து வருகின்றன. திங்கட்கிழமையான இன்று சோமவார வழிபாடு நடத்தப்பட்டது. கோவில் அர்த்த மண்டபத்தில் எழுந்தருளிய அமிர்தவல்லி உடனுறை அகத்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. சிவபூத கண வாத்தியங்கள் முழங்க சிவபுராணம் ஓதப்பட்டது. இதில், பொதட்டூர்பேட்டையை சேர்ந்த திரளான பெண்கள் மற்றும் சிவபக்தர்கள் பங்கேற்றனர். அப்பர்
குருபூஜை: பொதட்டூர்பேட்டை அத்தீஸ்வரர் கோவிலில் புதன்கிழமை அப்பர் குருபூஜை நடைபெற உள்ளது. இதில், காலை முதல் இரவு வரை பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.