பதிவு செய்த நாள்
22
ஏப்
2025
11:04
புதுக்கோட்டை: நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில் அனுமன் புடைப்பு சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலைக்கல்லுாரி தமிழ் துறை தலைவரும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளருமான காளிதாஸ் மற்றும் அவரது குழுவினர், நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் பகுதியில், பழமையான ஆஞ்சநேயர் புடைப்பு சிற்பத்தை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து, காளிதாஸ் கூறியதாவது: இந்த கற்பலகை 9 அடி உயரம், 3 அடி அகலமும் கொண்டது. இதில், அனுமனின் வால் துாக்கியவாறு உள்ளது. ஒரு கையில் கதாயுதத்தையும், மற்றொரு கையில் சஞ்சீவி மலையையும் ஏந்தி, தலையில் கிரீடத்தை அணிந்தவாறு, கலைநயத்தோடு கற்பலகையில் புடைப்பு சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.