கன்னியக்கோவில் முத்து மாரியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2025 02:04
பாகூர்; கன்னியக்கோவில் முத்து மாரியம்மன் கோவிலில் பால்குட அபிஷேகம் நடந்தது. கிருமாம்பாக்கம் அடுதத கன்னியக்கோவில் கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் செடல் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரண்டாம் நாளான இன்று அம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. இதையொட்டி, காலை 10.00 மணிக்கு கன்னியக்கோவில் குளக்கரையில் இருந்து பால்குட ஊர்வலம் துவங்கியது. இதில், திரளான பெண்கள் பங்கேற்று பால் குடங்களை தலையில் சுமந்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைத்தனர். பின்னர், 12.00 மணிக்கு அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 25ம் தேதி மாலை 5.00 மணிக்கு செடல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.