சிவளாபுரி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா; பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2025 02:04
அவிநாசி; சிவளாபுரி அம்மன் கோவில் 39ம் ஆண்டு குண்டம் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்த குண்டம் இறங்கினர்.
அவிநாசி தாலுகா, நடுவச்சேரி ஊராட்சி ஸ்ரீ கோமளவள்ளி உடனமர் கோட்டீஸ்வர சுவாமி கோவிலுக்கு உட்பட்ட ஸ்ரீ சிவளாபுரி அம்மன் கோவிலில் 39ம் ஆண்டு குண்டம் விழாவை முன்னிட்டு, கடந்த 20ம் தேதி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்றுதீர்த்த குடம், பூச்சட்டி, கரகம் எடுத்து ஊர்வலமாக வரும் நிகழ்ச்சியை தொடர்ந்து வேல் பூஜை நடைபெற்றது. இன்று அதிகாலை குதிரை உத்தரவு பெறுதல், படைக்கலம் எடுத்து வருதல் ஆகியவற்றை தொடர்ந்து குண்டம் திருவிழா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை மறு பூஜை, மஞ்சள் நீர், அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.