திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ பந்தகால் முகூர்த்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2025 04:04
காரைக்கால்; காரைக்காலில் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பந்தகால் முகூர்த்த நடைபெற்றது.
காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரணேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் அணுக்கிருக மூர்த்தியாக சனிபகவான் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா மிக விமர்சையாக நடைபெறும். இவ் விழாவை முன்னிட்டு இன்று பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியார்கள் பந்தக்காலுக்கு புனித நீருடன் பல்வேறு திரவங்களால் அபிஷேகம் ஆராதனை செய்தனர். இதைத் தொடர்ந்து வரும் 29ம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா துவக்குகிறது. ஜூன் 4ம் தேதி தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆறாம் தேதி தேர்திருவிழா மிக விமர்சையாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் பொதுமக்கள் விழாவை சிறப்பாக செய்து வருகின்றனர்.