பதிவு செய்த நாள்
25
ஏப்
2025
12:04
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தியில் உள்ள சத்யசாய் கோவிலில் சாய்பாபா ஆராதனை உற்சவம் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.
சத்ய சாய் சேவா சமிதியின் ஏற்பாட்டில், சாய்பாபா கோயில் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு, சாய் திருவுருவப்படம் மற்றும் சிவலிங்கத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன. சாய்பாபா பக்தர்கள் சிறப்பு பஜனைகள் செய்தனர். இந்த நிகழ்வில், சத்ய சாய் சேவா சமிதி பல சமூக சேவை திட்டங்களை ஏற்பாடு செய்தது.
* காளஹஸ்தியில் உள்ள முத்தியாலம்மா கோயில் தெருவில் அமைந்துள்ள சத்ய சாய் மந்திரில் 16வது சத்ய சாய் ஆராதனை உற்சவம் நடைபெற்றது. சத்ய சாய் சேவா சமிதியின் சார்பில் கோயிலை அழகாக அலங்கரிக்கப்பட்டு, சாய் பாபா திருவுருவப் படத்திற்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர், சாய் சேவா சமிதியின் கீழ் சமூக சேவை திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன, மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகிக்கப் பட்டன. இந்த நிகழ்ச்சியில் சாய் சேவா சமிதி உறுப்பினர்கள் பாண்டுரங்கய்யா வாசுதேவ் ராவ், டாக்டர். சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.