காமன் கோவிலில் மன்மதன்– ரதி சுவாமிக்கு திருக்கல்யாண விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2025 12:04
விழுப்புரம்; கண்டமானடி காமன் கோவிலில் மன்மதன் – ரதி சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழுப்புரம் அடுத்த கண்டமானடி கிராமத்தில் உள்ள காமன் கோவிலில், இந்தாண்டு சித்திரை உற்சவம், கடந்த மார்ச் 2ம் தேதி மன்மதன் சுவாமி உயிர்த்தெழுதல் நிகழ்வுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினசரி காலை, மாலை சிறப்பு பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வாக ரதி – மன்மதன் சுவாமி திருக்கல்யாணம் நேற்று காலை 10:15 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க நடந்தது. தொடர்ந்து, மகா தீபாராதனையும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. இதனையடுத்து, வரும் மே மாதம் 12ம் தேதி சித்திரை பவுர்ணமி தினத்தில், காலை 6:00 மணிக்கு மன்மதன் சுவாமியை, ஈஸ்வரன் அக்னியில் எரிக்கும் வரலாற்று நிகழ்வு நடக்கிறது.